ஸ்பெயினில் வெளியான பத்திரிக்கை செய்தி..! இந்திய பொருளாதாரத்தை சித்தரிக்கும் சர்ச்சை படம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 9-ந்தேதி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 'லா வான்கார்டியா' என்ற வாராந்திர பத்திரிக்கையில், இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய கட்டுரை  வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற சித்தரிப்பு படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த பக்கத்தில் மகுடி ஊதும் ஒரு பாம்பாட்டியின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த சித்தரிப்பு புகைப்படம் இந்தியாவை கலாச்சார ரீதியில் கேலி செய்யும் வகையிலும், மேற்கத்திய ஆதிக்க மனநிலையிலும் வரையப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

ஈந்த சம்பவம் குறித்து, பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் வலுவான பொருளாதாரம் உலக அங்கீகாரத்தைப் பெற்றாலும், சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது அடையாளத்தை பாம்பாட்டிகளைப் போல் சித்தரிப்பது வெறும் முட்டாள்தனம். காலனி மனநிலையை நீக்குவது கடினமான செயல்" என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வரும் பலர் இது ஒரு இனரீதியான வெறுப்புணர்வு மனநிலை என்றும், இந்தியாவின் கலாச்சாரம் குறித்து மேலை நாடுகள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விமர்சனம் வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், மேலை நாட்டினர் நம்மை எவ்வாறு சித்தரித்தாலும், நமது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Essay on Indian Economy in spein weekly magazine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->