வீட்டின் மீது விழுந்து சிதறிய விமானம்: பலரும் உயிரிழந்ததாக தகவல்! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள மொபைல் ஹோம் பார்க்கில் இன்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்களும் வீட்டில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 

ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தின் பைலட், எஞ்சின் செயலிலிருந்து விட்டது என தெரிவித்த சிறிது நேரத்திலேயே விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்து முழுவதுமாக சேதமடைந்து விட்டது. 

இந்த விபத்தினால் மூன்று வீடுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இது தொடரபாக தீயணைப்பு துறை தலைவர், விபத்துக்குள்ளான விமானம் ஒரே கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து வெளிவரவில்லை. 

இருப்பினும் இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள், விமானத்தில் பயணம் செய்தவர்கள் என பலரும் உயிரிழந்திருப்பதாக கருதப்படுகிறது. 

மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தை மத்திய புலனாய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Florida plane crashed house several died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->