ரஷ்யாவில் சோகம் - இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி - மேலும் ஒருவர் மீட்பு! - Seithipunal
Seithipunal


பொதுவாக இந்திய மாணவர்கள் ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மருத்துவம் மற்றும் இதர மேற்படிப்புகளுக்காக செல்வதுண்டு. அந்த வகையில் தற்போது ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த நான்கு மாணவர்கள் அங்குள்ள ஒரு ஆற்றில் மூழ்கி பலியான சோக சம்பவம் நிகழ்ந்துளளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ், ஜிஷன் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி, மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்கள் ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளனர். 

இந்நிலையில் இவர்கள் 4 பேரும் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அருகே உள்ள ஒரு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், "உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு அவர்களது உறவினர்களிடம் விரைவில் ஒப்படைப்போம்.

மாணவர்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதையடுத்து ஒரு மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும்" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four Indian Students Died in Russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->