ஜார்ஜியாவில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 8 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஜார்ஜியாவில் வடக்கு பகுதியில் உள்ள குடெவ்ரி மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

ஜார்ஜியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பாரா கிளைடிங் பயிற்சிக்காக சிறிய விமானத்தில் சென்ற பொழுது குடெவ்ரி பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்து மீட்பு பணிக்கு சென்ற ஜார்ஜாவின் ராணுவ பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அதே இடத்தில் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பாதுகாப்பு படை வீரர்கள், 2 மருத்துவர்கள் மற்றும் மீட்பு குழுவினர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து விமானப்படை போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Georgia army helicopter accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->