வரிவிதிப்பு ஒப்பந்தத்திற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புகிறார்...! - அமெரிக்க அதிபர் டிரம்ப்
Indian Prime Minister Modi wants a tax treaty US President Trump
அமெரிக்க அதிபர் 'டொனால்டு டிரம்ப்' மீண்டும் பதிவி ஏற்றதும், பல அதிரடி முடிவுகளை எடுத்ததுடன், பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். இது கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

மேலும், அவரது நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.இதில் மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தது.இதைத்தொடர்ந்து 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை 'டொனால்டு டிரம்ப்' நிறுத்தி வைத்தார்.
இதில் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிரம்ப் அறிவித்த 90 நாள் கெடு ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த வரி விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர் தெரிவித்தது,"இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஒப்பந்தம் ஏற்படும் என நினைக்கிறேன்.இந்திய பிரதமர் மோடி இங்கே (அமெரிக்கா) வந்திருந்தார். ஒப்பந்தம் ஏற்பட அவர்கள் விரும்புகிறார்கள்" எனப் பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவின் கருவூல செயலாளர் 'ஸ்காட் பெசென்ட்', இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் பரபஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்திருந்தாலும் எஃகு, அலுமினியம் மீதான 25 % வரிகளைத் தவிர 10 % என்ற அடிப்படை வரி நடைமுறையில்தான் உள்ளது.
English Summary
Indian Prime Minister Modi wants a tax treaty US President Trump