இந்த நாட்டில் இந்தியர்கள் இருக்கக் கூடாது - உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!
Indians should not be in this country Indian embassy instructs to leave immediately
இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது.
மேலும் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் பல்வேறு இடங்களில் வெடித்து சிதறியதில், 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 23ம் தேதி லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்ததில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 569 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இன்று 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லெபனானில் உள்ள இந்திய தூதரகம், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்றும், லெபனானில் உள்ள இந்தியர்கள் கட்டாயம் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தவிர்க்க இயலாத காரணங்களால் லெபனானில் தங்கி இருக்கும் இந்தியர்கள், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Indians should not be in this country Indian embassy instructs to leave immediately