ஜப்பானில் ஆச்சரியம்.! எரிமலை வெடிப்பால் தோன்றிய புதிய தீவு!
Japan new island emerged from volcanic eruption
தெற்கு ஜப்பான் பகுதியில் ஐவோ ஜிம்மாவுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிமலை 3 வாரங்களுக்கு முன்பு வெடிக்க தொடங்கியது.
எரிமலை வெடித்து 10 நாட்களுக்குள் சாம்பலும் பாறைகளும் ஆழமில்லாத கடற்பரப்பில் சேர்ந்து அதன் முனை கடலுக்குள் மேலே உயர்ந்து ஒரு தீவு போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலம் 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இந்த தீவு நிலைக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் கடலியல் சார் ஆய்வு முகமையின் ஆராய்ச்சியாளர், இந்த பகுதியில் எரிமலை வெடிப்பு என்பது அடிக்கடி நடைபெற்றது என்றாலும் தீவு போல நிலம் உருவாகுவது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து எரிமலைக்கு அருகில் உருவான நிலம் நிலைத்தன்மையானதாக இல்லாததால் அலைகளால் அடித்துச் செல்லப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இயற்கை பேரிடர் காரணமாக உலகில் பல இடங்களில் தீவுகள் உருவாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு நிசினோஷிமா பகுதியில் பசுபிக் கடலில் உள்ள எரிமலை வெடித்து பல ஆண்டுகளாக துகள்களும் பாறைகளும் புதிய நிலம்போல் உருவானது.
தற்போது உலகம் முழுவதும் 1500 எரிமலைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவற்றில் 111 எரிமலைகள் ஜப்பானில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Japan new island emerged from volcanic eruption