ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் மக்கள்!
Japan Powerful earthquake
ஜப்பான், ஹான்ஷு தீவின் கிழக்கு கடற்கரை பகுதி அருகே இன்று காலை 8.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Japan Powerful earthquake