ரஷ்யா பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடு என லாட்வியா அறிவிப்பு
Latvia declares Russia a state of terrorism
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யா பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடு என்று லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஒட்டுமொத்த உக்ரைனையும் நிலைகுலையச் செய்யும் முயற்சியிலும், உக்ரைன் மக்களை துன்புறுத்தியும், அவர்களை ஒரு கருவியாகவும் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
மேலும் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர், கிரெமெண்சக் நகரில் உள்ள வணிக வளாகம் என்று பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், லாட்வியா நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது பயங்கரவாதத்திற்கு இணையானது. எனவே ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம் என்று லாட்வியா அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் 100 பேர் கொண்ட நாடாளுமன்ற அவையில் 67 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
English Summary
Latvia declares Russia a state of terrorism