அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோர் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் இரு இந்தியர்கள்! - Seithipunal
Seithipunal


இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் ப்ரதிக் சின்ஹாவிற்கு வழங்க அதிக வாய்ப்பு!

நோபல் பரிசு ஆனது ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளை சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வ நாட்டிலும் பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டிலும் அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவம், வேதியியல், இயற்பியல், மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோர் குறித்த எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. பிரபல டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெயர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் இணைய பத்திரிகையின் செய்தியாளர் முகமது ஜுபைர் மற்றும் ப்ரதிக் சிம்ஹா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இவர்கள் இருவரும் இந்தியாவில் நிலவும் மத ரீதியான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொய் செய்திகளை கலைத்தற்காக நோபல் பரிசு வழங்கப்படலாம் என டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து வெளியாகும் பொய்த்தகர்களுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக மத்திய அரசால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் உக்கரை அதிபர் ஜெலன்ஸ்கி, ஐநா அகதிகள் முகமை, உலக சுகாதார நிறுவனம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

More chance to give nobalprize to Indian journalists Mohammad Shubair and Pratik Sinha


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->