பூஜையை தவறாக செய்ததால் புரோகிதரைத் தாக்கிய குடும்பம்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில், திருமண வரன் அமைவதற்கான பூஜையை தவறாக செய்ததற்காக புரோகிதரின் காதுகளை கடித்து, தாக்கிய வழக்கில் தந்தை மற்றும் இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர். 

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்த் சர்மா. இவருக்கு விபுல் மற்றும் அருண் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரை சேர்ந்தவர் குஞ்ச்பிஹாரி சர்மா. இவர் ஒரு புரோகிதர். 

இதையடுத்து லட்சுமிகாந்த் தனது மகனுக்கு திருமண வரன் சரியாக அமையவில்லை என்றும், நல்ல திருமண வரன் அமைய வேண்டும் என்பதற்காகவும்  பூஜை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பூஜையை நடத்தி தரும் படி லட்சுமிகாந்த் சர்மா, புரோகிதர் குஞ்ச்பிஹாரி சர்மாவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதன்படி புரோகிதரும் சடங்குகள் மற்றும் சத்யநாராயண பூஜைகளை செய்து தந்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பூஜைக்கு பின்னர், தவறான விளைவுகள் ஏற்பட்டு உள்ளன என்ற ஆத்திரத்தில், புரோகிதரின் காதுகளை லட்சுமிகாந்த் சர்மாவின் மகன் விபுல் கடித்து வைத்து உள்ளார். 

பூஜை நடந்த பின்னர், சர்மாவின் மகன் அருண் விசித்திரமாக நடந்துள்ளார் என்று தெரிவித்து, லட்சுமிகாந்த் மற்றும் அவரது மகன்கள் இருவரும் புரோகிதரை தாக்கியுள்ளனர். 

இந்தத் தாக்குதலில், புரோகிதருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. காதுகளில் ரத்ததோடு புரோகிதரை, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தந்தை, மகன்கள் என மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new maharastra marriage alaince pooja prist wrong


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->