அமெரிக்காவில் அடுத்தடுத்த மாற்றம்!...எலான் மஸ்க், விவேக் ராமசாமி-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்!... - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில், 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.

அப்போது, தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த இரண்டு பேரும்  அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், பெடரல் ஏஜென்சிகளை மறு சீரமைப்பதற்கும் எனது நிர்வாகத்திற்கு வழிவகை செய்வார்கள் என்று கூறியுள்ளார். இதே போல், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக ஆக்குவதற்கு  அவர்கள் உழைப்பார்கள் என்றும், 2026 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி அவர்களின் பணி முடிவடையும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next change in america trump gave a pleasant surprise to elon musk vivek ramasamy!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->