பாகிஸ்தான் || அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை.! ஒரு லிட்டர் ரூ.272
Petrol price hiked to 272 per litre in Pakistan
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானில், எப்போதும் இல்லாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், சூழ்நிலையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் 1.18 பில்லியன் டாலர் கடனாக பாகிஸ்தான் கோரியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் உயர்நிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாத நிலையில், கடன் வழங்குவதற்கு பாகிஸ்தான் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நிதியம் நிர்பந்தித்துள்ளது.
இதைத்தொடர்ந்து பொருளாதார சீரமைப்பு நடவடிக்கையாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை பாகிஸ்தான் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22.20 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.272 க்கு விற்கப்படுகிறது.
இதையடுத்து டீசல் லிட்டருக்கு ரூ.17.20 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.280க்கும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.12.90 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ.202.73 க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Petrol price hiked to 272 per litre in Pakistan