அமெரிக்கா பயணம் செல்லும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளைக் கடந்து இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்த சூழலில், அடுத்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வருகிற 26-ம் தேதி அன்று அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை  வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்க உள்ளார். பின்னர், வெள்ளை மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை துணை அதிபர் ஹாரிஸ் தனித்தனியாகச் சந்திப்பார்.

மேலும், ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவு, உக்ரைனின் மூலோபாய திட்டமிடல் உட்பட ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரின் நிலை குறித்து தலைவர்கள் கலந்து விவாதிப்பார்கள்.

இந்தப் போரில் அதிபரும், துணை அதிபரும், உக்ரைன் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நிற்பதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வலியுறுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President of Ukraine Zelensky will travel to the United States


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->