பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமருடன் நேரில் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாகவும் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக புருனே சென்று  தனது பயணத்தை முடித்திவிட்டு, இதனைத்தொடர்ந்து நேற்று அங்கிருந்து  சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரதமர் மோடிக்கு விடுத்த அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டுக்கு பிறகு 5-வது முறையாகவும், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் லயன் நகருக்கு விமானம் மூலம்  சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரியும், தமிழ் வம்சாவளியுமான கே.சண்முகம் நேரில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, நரேந்திர மோடி தான் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் மேளதாளங்களை வாசித்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு தந்தனர். அப்போது மேளம் வாசித்து நரேந்திர மோடி அனைவரையும் மகிழ்வித்தார்.

இதற்கிடையில்,  பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமர் இல்லத்துக்கு சென்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இரு தரப்புக்கு இடையில் நட்புறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர் என தகவல் வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Narendra Modi meets the Prime Minister of Singapore in person


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->