அமெரிக்க சனத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வம்சாவளி இளைஞர்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற உள்ள செனட் தேர்தலில் தமிழ் வம்சாவளி இளைஞர் அஸ்வின் போட்டியிடுகிறார். இளம் தலைமுறையின் முதல் தமிழ் வம்சாவளியாக போட்டியிடும் அஸ்வின் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அஸ்வின் ராமசாமியின் பெற்றோர்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். அவருடைய தந்தை கோயம்புத்தூரையும் தாயார் சென்னையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களின் மகனான அஸ்வின் ராமசாமி ஜனநாயக தேர்தலில் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஜார்ஜியாவின் முதல் 'ஜென்ஸி’ செனட் உறுப்பினர். கணினி அறிவியல் மற்றும் சட்டப் படிப்பை முடித்த ஜார்ஜியாவின் முதல் சனத் உறுப்பினர் ஜார்ஜாவில் தேர்வாகும் முதல் இந்திய வம்சவாளி செனட் உறுப்பினர் என்ற பெருமைகளை பெறுவார் அஸ்வின் . அவர் போட்டியிடும் இந்த தொகுதியில் தற்போது உறுப்பினராக உள்ள குடியரசு கட்சியை சேர்ந்த ஜான் ஸ்டில் ஓவரை தோற்கடித்து அஸ்வின் ராமசாமி வெற்றி பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil youth participating in usa senate election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->