புளோரிடாவில் தொலைக்காட்சி செய்தியாளர் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டை லைவ் நிகழ்ச்சியாக படம் பிடிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டை லைவ் நிகழ்ச்சியாக படம் பிடிக்க ஸ்பெக்ட்ரம் நியூஸ் 13 ஐ என்ற தொலைக்காட்சியை சேர்ந்த குழு சென்றுள்ளது. அப்பொழுது மர்ம நபர் ஒருவர் 2 தொலைக்காட்சியை செய்தியாளர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் சம்ப நடந்த வீட்டிலிருந்த 9 வயது சிறுமி, அவரது தாய் மற்றும் 2 தொலைக்காட்சி செய்தியாளர்கள் என நான்கு பேர் காயமடைந்த நிலையில், தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் மற்றும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான கீத் மெல்வின் மோசஸ (19) என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் ட்விட்டரில், புளோரிடாவின் ஆரஞ்ச் கவுண்டியில் இன்று கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் காயமடைந்த சக பணியாளரின் குடும்பத்தினர் மற்றும் ஒட்டுமொத்த ஸ்பெக்ட்ரம் நியூஸ் குழுவினருடன் எங்களது நினைவுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Television reporter shot dead in Florida America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->