மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்.! இருளில் மூழ்கிய உக்கரை நகரங்கள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைன் படைகள் ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் கிரீமியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ராணுவம் தொடர்பான போக்குவரத்து தடைப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய படையினர் உக்ரைன் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால், கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதுகுறித்து தெரிவித்ததாவது, உக்ரைனின் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது. மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின் விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியமில்லாத மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதிகமாக மின்சக்தியை நுகரும் சாதனங்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்கள் மின்நுகர்வை கவனமாக பயன்படுத்தினால் அடுத்து வரும் நாட்களில் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine cities plunged into darkness due to Russia attack on power plants


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->