பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரை நிறுத்துவதற்கான மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. மேலும் இப்போரில் தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் முக்கிய நகரங்களை ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றியுள்ளன.

இதனிடையே ரஷ்யா உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகாணங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபருடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரஷ்யா, உக்ரைனுக்கு இடையேயான போரில் அணு உலைகளுக்கு ஏற்படும் ஆபத்து சுற்றுச்சூழலுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும், போரை நிறுத்துவதற்கு ராணுவம் அல்லாமல், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து பேசிய உக்ரைன் அதிபர், உக்ரைனின் நான்கு மாகாணங்களை ரஷ்யா சட்ட விரோதமாக இணைத்து கொண்ட நிலையில், ரஷ்யாவுடன் எந்தவித பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு, இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine president refused to accept PM modi request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->