திரைப்படமாகும் இந்து புராணம்..இயக்குனரின் கனவில் வந்த ராமர்!! - Seithipunal
Seithipunal


ஆயிரம் கோடி பொருட்செலவில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட  பல்வேறு மொழிகளில் இந்துமத புராணக்கதைகளில் ஒன்றான  ராமாயணம் திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது.இதுவரை, புராணக்கதைகள் தொலைக்காட்சிகளில் நெடுந்தொடராக எடுக்கப்பட்டுவந்த நிலையில் முதன்முதலாக திரைப்படவடிவில் திரைக்குவர உள்ளது. சமீபத்தில், கல்கியின் புனைவு நாவலான பொன்னின் செல்வன் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்றது . பொன்னின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுத்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். 

ராமாயணம் திரைப்படத்தில் ராமராக ரன்பீர் காப்பீரும்  சீதையாக சாய்பல்லவி நடிக்கின்றனர் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது. ராமாயணத்தை கதையின் மையமாக வைத்து  மூன்று பாகங்களாக இயக்க உள்ளார் இயக்குனர்  நிதிஷ் திவாரி. திரைப்படத்த்திற்கு ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியானபொது சமூகவலைதங்களில் " ஒரு மதம் மாறிய முஸ்லீம் ; இந்து புராணமான  ராமாயணத்திற்கு இசையமைப்பதா?" என்ற விவாதம் எழுந்தது.

ஆயிரம் கோடி பொருட்செலவில் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல்வேறு  மொழிகளில் இத்திரைப்படமானது தயாராகிறது. படம் சார்ந்த அனைத்து தகவல்களையும் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu Purana as a movie.. Rama came in the director's dream!!


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->