நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ''ராபர்'' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!
Robber movie first look poster
எஸ்.எம். பாண்டி இயக்கத்தில் சத்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ராபர்''. இம்ப்ரஸ் ஃபிலிம் சார்பில் பத்திரிக்கையாளர் கவிதா எஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படபிடிப்பு சென்னை தியாகராய நகர், வேளச்சேரி, செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் தீபா ஷங்கர், ஜெயப்பிரகாஷ், சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். என்.எஸ். உதயகுமார் ஒலிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜோகன் சிவனேஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ராபர்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Robber movie first look poster