சுவையான 'ஸ்வீட் கார்ன் பிரியாணி' ஒருமுறை இப்படி செய்து பாருங்க.!
sweet corn biryani recipe in tamil
சுவையான ஸ்வீட் கார்ன் பிரியாணி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி
ஸ்வீட் கார்ன்
பட்டை ,கிராம்பு, ஏலக்காய்
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
பிரியாணி மசாலா
தனியா தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
எலுமிச்சை சாறு
உப்பு
எண்ணெய்
புதினா, கொத்தமல்லி
நெய்
செய்முறை:
முதலில் ஸ்வீட் கார்னை தோல் உரித்து சோளத்தை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை 10 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி ,மல்லி புதினா இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இரண்டு பச்சை மிளகாய், பிரியாணி மசாலா, தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா நன்றாக வதங்கியதும் சோளத்தை சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்ந்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் கொத்தமல்லி, புதினா சிறிதளவு நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஸ்வீட் கார்ன் பிரியாணி தயார்.
English Summary
sweet corn biryani recipe in tamil