வெயிலுக்கு இதமான 'பால் சர்பத்' இப்படி செய்து குடித்துப் பாருங்க!
Milk sarbath recipe in tamil
வெயிலுக்கு இதமான பால் சர்பத் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சியா விதைகள்
கார்ன் ஃப்ளவர் மாவு
பால்
பாதாம்
பிஸ்தா
சர்க்கரை
ஏலக்காய்
ஆப்பிள்
மாதுளை
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய், பாதாம், முந்திரி, கார்ன் ஃப்ளவர் மாவு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சியா விதைகளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
பால் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்துக் கொள்ளவும். 10 நிமிடம் நன்றாக கொதித்த பிறகு இறக்கி விடவும்.
ஒரு டம்ளரில் பால் சர்பத் ஊற்றி ஆப்பிள், மாதுளை, சியா விதைகள் சேர்த்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கவும். அவ்வளவுதான் சுவையான பால் சர்பத் தயார்.
English Summary
Milk sarbath recipe in tamil