கொளுத்தும் கோடை வெயில் - வியர்க்குரு நீங்க சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


தற்போது கோடைகாலம் தொடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகுவார்கள். அதாவது வியர்க்குரு, அரிப்பு என்று பல இன்னல்களை சந்திப்பார்கள். அதனால், இந்தக் கோடைக்கு காலத்தில் உடலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.

* இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம், பனை நுங்கு போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.

* வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் தேய்த்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு குளிக்கலாம். கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும். 

* வெயில் காலத்தில் வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும். காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.

* கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

* வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தான். இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

* சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

* வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து தடவி நன்றாக காயவைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும் இதையெல்லாம் செய்தால் வியர்க்குரு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of clear Sweating


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->