மோடிக்கு "தில் இருந்தால்" இதை செய்யட்டும்.. கே.பி‌ முனுசாமி நேரடி சவால்.!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே‌.பி முனுசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசியவர் "பாஜகவிற்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றால் தமிழகத்தை சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களை தமிழ்நாட்டில் போட்டியிட வைக்கட்டும்.

மோடிக்கு தில் இருந்தால் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரையும் தமிழகத்தில் எந்த தொகுதியிலையாவது நிறுத்துங்கள்.

தமிழக மக்கள் உங்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவார்கள் என தெரியும். தமிழ்நாடு கல்வி சுகாதாரம் நீர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது. பாஜகவின் ஆட்சி 17 மாநிலங்களில் நடைபெறுகிறது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு துறைகளில் தமிழகம் தான் விருது பெற்றுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் அல்ல. இதெல்லாம் ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு இது தெரியாதா?

பாஜக 300 தொகுதிகளில் கூட வெற்றி பெறலாம். ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எங்களுக்கு போட்டி திமுக மட்டும் தான். பாஜக கிடையாது. இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டோம் என பாஜக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தேர்தல் நடைபெற்று வாக்குகள் என்னும் பொழுது தான் பாஜகவிற்கு எத்தனாவது இடம்  என்பது தெரியும். ஆகவே சமூக வலைதளங்களில் பேசி மக்களை ஏமாற்றுவது போல் உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள்" என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kpmunusamy challenged pmmodi bjp ministers should contest in tn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->