குக்கர் என்றால் டிடிவி... டிடிவி என்றால் குக்கர்... அதிரடி காட்டும் டிடிவி தினகரனின் மனைவி.!
ttv Dhinakaran wife campaigned
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, குக்கர் போல தானே அவரது முகமும் குண்டாக இருக்கிறது. அதனால் அவரை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு குக்கர் ஞாபகம் தான் வரணும்.
குக்கர் சின்னம் எல்லாம் இடத்துக்கும் தெரிய வேண்டும். டி.டி.வி தினகரனின் சின்னம் குக்கர் சின்னம். அவர் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்கள் வீட்டில் ஒருவராய் இருக்கிறார்.
குக்கர் சின்னம் ஆர்.கே. நகரில் போட்டியிட்டபோது வெற்றி பெற்றது. அதேபோல் தேனி தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டாக இருக்க வேண்டும். குக்கர் என்றால் டி.டி.வி.. டிடிவி என்றால் குக்கர் என தெரிவித்துள்ளார்.
English Summary
ttv Dhinakaran wife campaigned