போலிநகைகளை வைத்து 2 கோடி மோசடி..கேட்ச் போட்டு குடுத்த வங்கி மேலாளர்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தை அடுத்த  காரப்பேட்டை மற்றும் கம்மார் பாளையம்,  சங்கரமடம் அருகே உள்ள இந்தியன் வங்கிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தங்கமூலாம்  பூசப்பட்ட  போலிநகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த ஆண்டு மே மாத முதல் டிசம்பர் மாதம் வரையிலான அடமானம் வைக்கப்பட்டவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்து பார்த்தனர்.

அதனை வைத்து போலிநகைகளை மோசடி செய்து அடமான வைத்தவர்கள் விபரங்களை தயார்செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனுவை அளித்தார் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜராமன்.

வங்கி மேலாளர் அளித்த புகாரின் பெயரில்,மேகநாதன், பிரகாஷ், சுரேந்தர் அகியோரை பிடித்து விசாரித்த போது, மோசடியில் ஈடுபடுவதற்காக கவரிங் நகைகளை வாங்கி தங்கம் முலாம்பூசி நகைகளை வங்கியில் அடகு வைத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதுவரைக்கும் காரப்பேட்டை இந்தியன் வங்கி கிளை , சங்கரமடம் கிளையிலும் , வேளியூரை அடுத்த கம்மவார் பாளையம் கிளையும் சேர்த்து 2 கோடியே 53 லட்சம் போலிநகை அடகு வைத்து மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி சம்பந்தமான போலீசார் ராஜேஷ், சரவணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Crore fake jewellery Bank manager caught


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->