சீர்காழி || பெண்ணின் வீட்டில் சிக்கிய 3000 மதுபாட்டில்கள் - தேர்தலுக்காக கடத்திவரப்பட்டதா? - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் ஒரு வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி போலீசார் விரைந்து சென்று, அந்த கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குமுதவல்லி என்பவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் சாக்கு மூட்டைகள் மற்றும் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் மற்றும் 110 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் போலீசார் இந்த மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த குமுதவள்ளி என்ற பெண்ணை கைது செய்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த பெண்ணிடம், மது பாட்டில்கள் தேர்தலுக்காகக் கடத்திவரப்பட்டதா? அல்லது எதற்காகக் கடத்தி வரப்பட்டது? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்களின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 liquor bottles seized in seerkazhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->