பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. நிர்வாகி:  அண்ணாமலை கடும் கண்டனம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற போது தி.மு.க நிர்வாகி, பெண் கிராம அலுவலர் மற்றும் அவரது சகோதரி இருவரையும் கன்னத்தில் அறைந்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். 

மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக பொய் புகார் அளிக்க மறுத்ததால் இந்த தாக்குதலை தி.மு.க நிர்வாகி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரு தெருவாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் ஆட்சிக்குப் பிறகு தனது கட்சியினரை கண்டிக்காதது தான் இது போன்ற அராஜகத்திற்கு காரணம். 

பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்த தி.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai condemned DMK attacked administrator


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->