தூத்துக்குடி | உப்பு விலை திடீர் உயர்வு! உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் உப்பளங்கள் மூழ்கி உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இதனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக தொடங்கியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஒரு டன் ரூ. 2000 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு டன் ரூ. 4000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

அதே சமயத்தில் புதியதாக உற்பத்தியாகி வரும் உப்பு ஒரு டன் ரூ. 1500 முதல் ரூ. 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது. உப்பு விலை உயர்ந்து காணப்படுவதால் தூத்துக்குடியில் இருந்து உப்பு இறக்குமதி செய்த கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi salt price increased


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->