கோடை வெப்பம் அதிகரிப்பு: தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!  - Seithipunal
Seithipunal


வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மேற்கு வங்காளத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் சேர்க்கை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.  இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல் பல்வேறு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மிக கடுமையான வெப்பநிலை 12 மணி முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். 

மேலும் வெப்பநிலை காரணமாக உடல்நல குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதேபோல் இன்று மற்றும் நாளை மிக கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்பதால் மேற்கு வங்க மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும் ஒடிசா மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->