தொழிலாளர் தினத்தில்.. "சிலிண்டர் விலை குறைப்பு".. எவ்வளவு தெரியுமா?
Commercial gas cylinder rate reduced rs19
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹19 குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 19 குறைக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/gas-bfuh4.jpg)
இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த விலை மாற்றத்தின் படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹ 1911 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை மாற்றப்படவில்லை. உழைப்பாளர் தினமான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Commercial gas cylinder rate reduced rs19