அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு; நடந்தது என்ன?
Police security at former AIADMK minister Sengottaiyan house
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள, அவரது தோட்டத்து வீட்டுக்கு 02 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/SENKO-5ftpm.jpg)
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் போட்டோக்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.
அவரின் இந்த புறக்கணிப்பு அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/SENKOTTAIYAN-y5ph2.jpg)
இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் விளக்கமளித்திருந்தார். அதாவது, அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லை என செங்கோட்டையன் அமைப்பாளரிடம் மட்டுமே தெரிவித்தாகவும் பொதுச்செயலாளர் மீது குற்றம் சாட்டவில்லை எனவும் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police security at former AIADMK minister Sengottaiyan house