ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,568 உயர்வு..!!
Gold price raised Rs4568 per 8gm in a single year
தமிழகத்தில் நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ரூ. 41,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வருடம் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தனர்.
இதன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்தது. கடந்த 2022 ஜனவரி 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4559க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ. 5,130 விற்பனை செய்யப்பட்டது. அதாவது கடந்த புத்தாண்டு ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.36,472க்கு விற்பனை செய்யப்பட்டு ஆண்டு முடிவில் ரூ. 41,040க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு 4,568 ரூபாயும்; கிராமுக்கு 571 ரூபாயும் அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த ஒரு வருடத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 8.30 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Gold price raised Rs4568 per 8gm in a single year