நீதிமன்ற அவமதிப்பு.. புதுச்சேரி அதிகாரிகளை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Contempt of court Madurai Bench of Madras High Court orders arrest of Puducherry officials
புதுச்சேரி மாநில ஊர்க்காவல் படை தேர்வு நீதிமன்ற உத்தரவை அவமதித்தஅதிகாரிகளை கைது செய்து 24.01.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க புதுச்சேரி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில ஊர்க்காவல் படை தேர்வு நீதிமன்ற உத்தரவை அவமதித்த புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கு எதிராக மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதி அரசர் ஆனந்த வெங்கடேசன் சம்பந்தப்பட்ட புதுச்சேரி துறை அதிகாரிகளை கைது செய்து 24.01.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க புதுச்சேரி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அவர் தெரிவிக்கையில்:புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஊர்க்காவல் படை தேர்வில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணையில் உள்ளது போல பாட முறைகளில் இருந்து கேள்வித்தாள்கள் கேட்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த தேர்வாளர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில் 54 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் .
தொடரப்பட்ட இந்த வழக்கில் நீதியரசர் ஆனந்த வெங்கடேசன் அவர்கள் அளித்த தீர்ப்பை அவமதித்த புதுச்சேரி மாநில நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை செயலாளர் பங்கஜ் குமார் ஜா, காவல் தலைவர் அஜித்குமார் சிங்களா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அனிதா ராய், மற்றும் காவல் தலைமையக் காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஷ் உள்ளிட்டோரை கைது செய்து வருகின்ற 24.01.2025 அன்று மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மதியம் 2.15 க்கு ஒப்படைக்க புதுச்சேரி மாநில காவல் டிஜிபி அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
English Summary
Contempt of court Madurai Bench of Madras High Court orders arrest of Puducherry officials