சர்வதேச பலூன் திருவிழா.. கோவளத்தில் கோலாகல தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சர்வதேச அளவில் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்னார்.  

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சர்வதேச பலூன் திருவிழா இன்று முதல் தொடங்கியுள்ளது.10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் ஜனவரி10-ந்தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த  பலூன் திருவிழா நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சர்வதேச அளவில் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்னார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 International Balloon Festival Celebrations begin in Kovalam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->