சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பிற்கான டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்மூலம் புதிய சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் கட்டணம் 700 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு புதியதாக பெறப்படும் சிலிண்டர் இணைப்புக்கு பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கான கட்டணம் 1450 ஆக இருந்த நிலையில், தற்போது 2200 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 5 கிலோ சிலிண்டர் டெபாசிட் தொகை 800 ரூபாய் உயர்ந்துள்ளது. புதிதாக சிலிண்டர் இணைப்புப் பெறுவதுடன், கூடுதல் கேஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு ரூ. 4600 ஆக அதன் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

increase in deposit amount for cylinder connection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->