என்னப்பா ஆகா, ஓகோன்னின்க! "மத கஜ ராஜா" 3 வசூல் இவ்வளவு தானா?! இதென்ன கொடுமையா இருக்கு?!
Madha Kaja Raaja 3 days collection
பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள "மத கஜ ராஜா" திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், நடிகர்கள் விஷால், சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, நடிகைகள் வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் உருவானது.
ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜெமினி பிலிம் சர்கியூட், தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்து காலம் தாழ்த்தினர்.
இந்நிலையில், "மத கஜ ராஜா" திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நடிகர் மணிவண்ணன், விஷால் நடிப்பு, சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரப்பேற்பை பெற, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மத கஜ ராஜா திரைப்படம் 3 நாள்களில் உலகளவில் ரூ.12 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் முதல் நாள் வசூல் ரூ.3 கோடிக்கு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
English Summary
Madha Kaja Raaja 3 days collection