'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் நாளை..? படக்குழு அறிவிப்பு..!
Trailer of the film Vidamuyalchi tomorrow
நடிகர் அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அன்று வெளியாகாது என்று படக்குழு அறிவித்தது.
அத்துடன், அஜித் நடித்த மற்றொரு படமான 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் 'விடாமுயற்சி' திரைப்படத்தை இம்மாத இறுதியில் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் நாளை வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், நாளை டிரெய்லர் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
English Summary
Trailer of the film Vidamuyalchi tomorrow