பொங்கலுக்கு வெளியான ஒரே நாளில் "தருணம்" திரைப்படம் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!
THarunam movie stopped
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான தருணம் திரைப்படம் நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
'தேஜாவு' பட இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், நடிகர் கிஷன் தாஸ் நடித்த திரைப்படம் தருணம்.
இந்த படத்தில் கிஷன் தாஸ் ஜோடியாக ஸ்ம்ருதி நடித்து உள்ளார். தர்புகா சிவா பாடல்களுக்கான இசையையும், அஸ்வின் ஹேமந்த் பின்னணி இசையையும் அமைத்துள்ளனர்.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், படம் வெளியான ஒரே நாளில், அதன் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே வெளியானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.