அவ்ளோதான் நம்பள முடிச்சிவிட்டுடிங்க போங்க! வரத்து குறைவால் பூண்டு கிலோ ரூ.500-க்கு விற்பனை! - Seithipunal
Seithipunal


கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலைகள் கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளன. பொதுவாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிகளவு பூண்டு கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. தினசரி 150 டன் அளவிலான பூண்டு விற்பனை வழக்கமாக இருக்கின்றது. ஆனால், தற்போது மத்திய பிரதேசம் என்ற மாநிலத்தில் இருந்து 25 டன் பூண்டு மட்டுமே வருவதால், பூண்டு விலைகள் திடீரென அதிகரித்து விட்டன.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ பூண்டு ரூ.300க்கு விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது அதன் விலை ரூ.350ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை ரகத்திற்கு ஏற்றார் போல, ஒரு கிலோ பூண்டு ரூ.220 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில், இந்த விலை ரூ.300 முதல் ரூ.400 வரை இருக்கிறது. அதேபோல், வெளி மார்க்கெட்டில் பூண்டு விலை ரூ.450 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

இதனுடன், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வெங்காயம் விலையும் ஏற்கனவே ரூ.100-யை எட்டியுள்ள நிலையில், பூண்டு விலையின் ஏற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகுந்த கவலைக் காரணமாக உள்ளது.

பூண்டு வியாபாரி ஒருவர் கூறியபடி, "கோயம்பேடு சந்தைக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வருகிறது. இப்போது, இந்த மாநிலங்களில் பூண்டு சீசன் முடிவதோடு, வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக பூண்டு விலை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், ஜனவரி மாத இறுதியில் மீண்டும் வரத்து அதிகரிக்கும், அதன் பிறகு பூண்டு விலை படிப்படியாக குறையும்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sale of garlic for Rs 500 kg due to lack of supply


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->