அட்லாண்டில் பெருங்கடலில் படகு விபத்து - 60 அகதிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


அட்லாண்டில் பெருங்கடலில் படகு விபத்து - 60 அகதிகளின் கதி என்ன?

தீவு நாடான கேப் வோ்ட் அருகே அட்லாண்டில் பெருங்கடல் பகுதியில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டு மீன்பிடி படகில் இருந்தவா்கள் கடலில் தத்தளித்த அகதிகளை மீட்டனா். 

மேலும், அந்தப் படகிலிருந்து 7 உடல்களும் மீட்கப்பட்டன. இந்தப் படகில் சுமார் 100-க்கும் அதிகமானவா்கள் இருந்த நிலையில், சுமார் 60-க்கும் மேற்பட்டவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து செனகல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:- "விபத்துக்குள்ளான படகிலிருந்து 38 போ் மீட்கப்பட்டுள்ளனர்.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சோ்ந்தவா்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி ஆபத்தான கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினை நோக்கிச் செல்லும் கடல் வழித்தடம் மிகவும் அபாயம் நிறைந்த பகுதி.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த ஆபத்தான பகுதி வழியாக படகு மூலம் சென்றவர்களில் சுமாா் 1,000 போ் உயிரிழந்துள்ளதாக வாக்கிங் பாா்டா் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவை அடைவதன் மூலம் ஐரோப்பாவுக்குள் அடைக்கலம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இதுவரைக்கும் கேனரி தீவுக்கு இந்த ஆண்டில் மட்டும் 10,000 அகதிகள் அடைக்கலம் தேடி வந்துள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died and sixty peoples missing in boat accident in atlandic sea


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->