கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு..!
Trailer of Goundamani otha votu muthaiya movie released
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர். படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.
அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் கடந்த 04-ஆம் தேதி நடைபெற்றது. படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் வழியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
https://x.com/FiveStarAudioIn/status/1887420477510934934
https://www.youtube.com/watch?v=U5fBnW8PbGM
English Summary
Trailer of Goundamani otha votu muthaiya movie released