சாலை விபத்தில் சிக்கி பிரபல இளம் யூடியூபர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான நகைச்சுவை நடிகரும், யூடியூப்பருமான தேவராஜ் படேல் நேற்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூர் அருகே லபாந்தி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று அவர் தனது பைக்கில் யூடியூப் கண்டென்ட் சேகரிக்க சென்ற போது இவர்கள் வாகனத்தில் லாரி மோதியுள்ளது. இதில் தேவராஜ் படேல் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பாட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

தேவராஜ் படேலின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "நம்மை சிரிக்க வைத்து கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்த தேவராஜ் படேல் நம்மை விட்டு பிரந்தார். இந்த இளம் வயதில் அபார திறமை கொண்ட தேவராஜ்ஜின் மறைவு மிகுந்து வேதனை அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார். சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தின் தாப்பாலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கன்ஷியாம் படேலின் மகன் தேவராஜ் படேல். இவருக்கு யூடியூபில் தேவராஜ்ஜிற்கு 4 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மறைவு செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A famous young YouTuber died in a road accident fans are in shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->