சட்டசபையில் சவால் விட்ட CM ஸ்டாலின்! ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி!
TN Assembly Pollachi case au case MK Stalin vs Edappadi palanisami
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பல விவகாரங்களில் கடுமையான விவாதம் நடைபெற்றது.
குறிப்பாக அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் சவால் விடுக்கும் நிலையிக்கு முதல்வர் ஸ்டாலின் தள்ளப்பட்டு உள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணிநேரத்தில் மூவர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க, இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 12 நாட்கள் கழித்தே பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், தனது கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறி, எடப்பாடி பழனிசாமி தன்னைச் சரி என நிரூபித்தால் அவர் தண்டனை பெறத் தயாரா என சவால் விடுத்தார்.
இதற்கான ஆதாரங்களை பேரவைத்தலைவரிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அதேவேளை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் அடுத்த நாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டது எனவும் முதல்வர் தகவல் அளித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி விவகாரத்தில் உண்மைக்கு முரணான தகவல்களை வழங்கியதாக குற்றம்சாட்டி, ஸ்டாலின் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
English Summary
TN Assembly Pollachi case au case MK Stalin vs Edappadi palanisami