தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதறிய பிரபல நடிகை.!!  - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதறிய பிரபல நடிகை.!! 

பிரபல நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை தீபா, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அழுத சம்பவம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் நடித்து வந்த போது பெரிய அளவில் பிரபலமாகாத தீபா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து தீபா டிவி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தாண்டி சீரியல் மற்றும் விளம்பரம் என்று தீபா பிஸியாகி விட்டார்.

இவரது குழந்தைத்தனமான செயல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தீபா, சமீபத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "தமிழா தமிழா" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பத்திரிகையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபாவிற்கு இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் கிடைக்கும் பூனையின் புளுக்கையில் இருந்து செய்யப்பட்ட காபியை தொகுப்பாளர் குடிப்பதற்காக கொடுத்துள்ளார்.

ஆனால், தீபா மறுத்து விடுகிறார். அங்கு இருக்கும் பெசன்ட் ரவி தீபாவை அந்த காபியை குடிக்க வைத்தார். அப்போது அவர் "என் கழுத்தைப் பிடித்து நெறிக்கிறாங்க... கொலை பண்ண பார்க்கிறாங்க..." என்று கதறியது தற்போது வைரலாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor deepa cry in tv show


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->