புறநானூறு படத்தில் வில்லனாக நடிக்கும் நிவின் பாலி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரியசாமி ராஜ்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'அமரன்'. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே சமயம் சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதேபோல், சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையே சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படம் 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor nivin pauly joined work purananooru movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->