கடந்த ஆண்டில் ரூ.40,000 கோடிக்கு ஆப்பிள் ஐபோன் உற்பத்தி செய்து சாதனை படைத்த டாடா நிறுவனம்..!
Tata, which created a record by producing Apple iPhones worth Rs. 40,000 crore last year
இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றன. கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.
இந்நிலையில், நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி, கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.
2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர்.இந்நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் பணியாற்றியுள்ளதாக தெரியவருகிறது. இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் என்ற நிறுவனம் தமிழத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் கையடக்க தொலைபேசிகளை உற்பத்தி(Assembly) செய்து வருகின்றது.
English Summary
Tata, which created a record by producing Apple iPhones worth Rs. 40,000 crore last year