மகாபாரதத்திலும் நடிக்க தயார் - நடிகர் சையிப் அலிகான் பேட்டி..!
actor saif ali khan press meet
ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில், பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர்.
3டி முறையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக டீசரில் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சி அமைந்துள்ளதாக தெரிவித்து, அயோத்தியில் அமைத்துள்ள ராமர் கோவிலின் தலைமை குரு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர்கள் என்று பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சையிப் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, "மகாபாரதத்தை யாராவது 'லார்ட் ஆப் ரிங்ஸ்' படம் போல் உருவாக்கினால் அதிலும் நான் நடிக்க தயார். இதுகுறித்து, அஜய் தேவ்கனுடன் 'கச்சே தாகே' படத்தின் போதே பேசினோம்.
இது எங்கள் தலைமுறையில் கனவு படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியில் உருவானாலும் சரி, தென்னிந்திய மொழியில் உருவானாலும் சரி. இது போன்று பிரமாண்ட படத்தை உருவாக்குவோம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சையிப் அலிகான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor saif ali khan press meet