சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமர் மோடி உத்தியோகபூர்வ சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


​இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.

அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்தியா வருகை தந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில்  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சிங்கப்பூர் அதிபரை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, சிங்கப்பூர் அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Official meeting between the President of Singapore and Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->